பதிவு:2025-01-10 12:30:11
திருவள்ளூரில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்டம் சிறப்பாக நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் ஜன 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்டம் சிறப்பாக நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் நகர் பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் 2 கட்டமும் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீது சரியான முறையில் தீர்வு காணப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது தற்பொழுது தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்டமாக 25 மாவட்டத்தில் 127 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 இடங்கள் நடத்தப்பட உள்ளது.
அதாவது 1270 முகாம்கள் நடைபெற உள்ளது அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்டமாக ஒன்பது வருவாய் வட்டங்களில் உள்ள 11 வட்டங்களில் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் விளிம்பு நிலை பட்டியல் இன மக்கள் அதிகமாக வசித்து வரும் 50 கொக்கு கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்திட வேண்டும்.
முகாம் நடைபெறும் இடம் மக்கள் எளிதில் அணுக கூடிய இடத்தில் நடத்தப்பட வேண்டும் குறிப்பாக விளிம்பு நிலை பட்டியல் இன மக்கள் அதிகமாக வசித்து வரும் குக்கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் நடைபெறும் முகாம்களில் 15 துறைகளில் 44 சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுவது தொடர்பாக நடைபெறும் எனவே அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு வரும் கோரிக்கை மனுக்கள் மீது சரியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், தனித்துணை ஆட்சியர்(சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.