பதிவு:2025-01-10 12:32:23
அலமாதியில் அமைந்துள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா :
திருவள்ளூர் ஜன 10 : திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் அமைந்துள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் சங்கர.சரவணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் க.ந.செல்வக்குமார்,தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் ந.குமாரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளுவரின் கருத்துகளையும் திருக்குறளின் சிறப்புகளையும் மாணவ மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, குறளோவியம் வரைதல், நாட்டுப்புற விளையாட்டுப் போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கு பெற்று வென்ற மாணவியர்களுக்கு பரிசுகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் சங்கர.சரவணன் வழங்கினார்.
முன்னதாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் ந.குமாரவேலு அவர்களிடம் வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்க நிறுவனர் மற்றும் தலைவர், கலைமாமணி வி.ஜி.சந்தோசம் வழங்கினார்.
இதில் மாணவர் பேரவை துணைத் தலைவர் அய்யாவு பிரேம்நாத் மனோகரன், இக்கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.