வெங்கத்தூர் ஊராட்சி 15-வது வார்டை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தல் : பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்து 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நியாய விலை கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் :

பதிவு:2025-01-10 12:36:06

திருவள்ளூர் ஜன 10 : திருவள்ளூர் நகராட்சியை சுற்றி உள்ள ஈக்காடு, காக்களூர், சேலை, புல்லரம்பாக்கம், வெங்கத்தூர் உட்பட மேலும் சில ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் வெங்கத்தூர் கிராமமானது 15 வது வார்டில் வருகிறது. இந்த கிராமத்தில் 1000 குடும்பங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கிராமமாக உள்ளது.

இதனால் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் 15 வது வார்டில் உள்ள வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுப்பு தெரிவித்து வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையை முற்றுகையிட்டு தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

100 நாட்கள் வேலை திட்டத்தை நம்பியே இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நகர வாழ்க்கை சிறிதும் பொருந்தாத இடமாக இந்த வெங்கத்தூர் 15-ஆவது வார்டு உள்ளது. எனவே 15 வது வார்டை மட்டும் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் மட்டுமே எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதுகாக்கப்படும். நகராட்சியாக மாறும் போது வரி செலுத்தக்கூடிய நிலைமையில் இந்த கிராம மக்கள் யாரும் இல்லை.எனவே திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய உரிய அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்து வெங்கத்தூர் கிராமம் 15 வது வார்டை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.