பதிவு:2025-01-10 12:37:25
அரசின் ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு திட்டத்தில் இணைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வேண்டுகோள் :
திருவள்ளூர் ஜன 10 : அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு மூலம் 09.05.2015 தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டமான பிரதான மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான மந்திரி சுரஷா பீமா யோஜனா காப்பீடு மிக குறைந்த காப்பீட்டுத் தொகையை செலுத்து இத்திட்டத்தில் இணைந்து ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் ஆகும். PMJJBY என்பது ஆயுள் காப்பீடு மற்றும் PMSBY என்பது விபத்துக் காப்பீடு ஆகும்.
ஆயுள் காப்பீடுக்கு வயது வரம்பு 18 முதல் 50 வரை,இத்திட்டத்தில் வயதுக்கு முன்பே இணைத்துக் கொண்டால் 55 வயது வரை தொடர்ந்துக் கொள்ளலாம். ஆண்டுக் காப்பீட்டு தொகை ரூ. 436 மட்டும்,காப்பீட்டுத் திட்டத்தின் காலம் 01 ஜூன் முதல் 31 மே வரை,காப்பீடுத் திட்டம் புதுப்பிக்க மாதம் 21ம் தேதி முதல்31ம் தேதி வரை காப்பீட்டு தாரரின் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் மட்டும். இழப்பீட்டுத் தொகை வாரிசுதாரர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
விபத்துக் காப்பீடுக்கு 18 முதல் 70 வரை வயது வரம்பு ஆகும். ஆண்டுக் காப்பீட்டு தொகை ரூ. 20 மட்டும். காப்பீட்டுத் திட்டத்தின் காலம் 01 ஜூன் முதல் 31 மே வரை,காப்பீடுத் திட்டம் புதுப்பிக்கும் முறை மே மாதம் 21ம் தேதி முதல்31 ம் தேதி வரை,காப்பீட்டு தாரரின் வங்கிக் கணக்கில் போதிய இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும்.
இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் மட்டும். ரூ. 2 லட்சம் விபத்தினால் இறப்பு மற்றும் ரூ.2 லட்சம் விபத்தினால் நிரந்தர ஊனம்.ரூ.1 லட்சம் விபத்தினால் பகுதி ஊனம்.இழப்பீட்டுத் தொகை வாரிசுதாரர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் காப்பீட்டுத் தாரருக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் அவர்களின் காப்பீடுத்தாரரின் வங்கி கணக்கு பராமரித்து வரும் வங்கிக் கிளையை அணுகி காப்பீட்டுத் தொகைக்கான இறப்பு உரிமைகோரல் படிவம் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலும் இத்திட்டத்தை www.Jansuraksha.gov.in என்று இணையத் தலத்தின் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் நாட்டின் அனைத்து குடிமக்களும் (அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட) இணைந்து காப்பீட்டை பெற்று பாதுகாத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.