பதிவு:2025-01-11 10:44:37
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா வாகனங்களில் யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு :
திருவள்ளூர் ஜன 11 : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பி. வி ரமணா தலைமையில் ஒன்றிய நகர நிர்வாகிகளின் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் யார் அந்த சார் என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் பூண்டி மாதவன், சூரகாபுரம் சுதாகர், நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.பி.எம். எழிலரசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் எஸ்.ஏ.நேசன், ஒன்றிய அவைத்தலைவர் சிற்றம் சீனிவாசன், எஸ்.ஞானகுமார் நகர அம்மா பேரவை தலைவர் ஜோதி, நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார், நிர்வாகிகள் பேரம்பாக்கம் ஆர்.டி.இ.சந்திரசேகர், கோட்டீஸ்வரன், ஜெயா நகர் குமரேசன், உமாபதி ஆகியோரது வாகனங்களில் யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
அதேபோல் நியூஸ் ஜெ செய்தியாளர் கருணாநிதியின் இரு சக்கர வாகனத்திலும் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசிக்கு யார் அந்த சார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.