காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தல்- 2 பேர் கைது

பதிவு:2022-03-15 20:56:15



காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தல்- 2 பேர் கைது

காஞ்சீபுரம்: மார்ச் 15



காஞ்சீபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி வந்த கோவிந்தவாடி அகரம் பகுதியினை சேர்ந்த முருகன் 36, மேகநாதன் 33, ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.