பதிவு:2022-06-07 12:24:12
அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் முதல் புத்தக கண்காட்சி திருவிழா : திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்து, பார்வையிட்டார்
திருவள்ளூர் ஜூன் 07 : திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சி, பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் முதல் புத்தக கண்காட்சி திருவிழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் முன்னிலையில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்து, பார்வையிட்டு பேசினார்.
அயப்பாக்கம் கிராமத்தில் புத்தக திருவிழாவை மிகச் சிறப்பாக வீரமணி நடத்தி வருகிறார். இந்த முதல் புத்தக கண்காட்சி இன்று முதல் ஜூன் 13 வரை காலை 9 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.புத்தக கண்காட்சி 16,000 சதுர பரப்பளில் பேரறிஞா அண்ணா பூங்கா ரூ.80 இலட்சம் மதிப்பீடடில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் தற்பொழுது இப்புத்த கண்காட்சியில் 23 அரங்கங்களிலிருந்த 20,000-ம் எண்ணிக்கையிலான புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் நாள்தோறும் மாலை 5 மணியிலிருந்து சிறப்பு நிகழ்சசிகள் நடைபெறவுள்ளது. ஆகவே, இப்புததக கண்காட்சியை அனைத்து தரப்பு மக்களும் முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
முன்னதாக, இப்புத்தக கண்காட்சியில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் திருவுருப் படத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 99 மரக்கன்றுகளை நடும் பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இப்புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை தயாரித்தல் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 5 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1,25,000-ம் மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களையும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எஸ்.கோவிந்தராஜன், திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கே.ஆர். ஜவஹர்லால், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அ.ம.துரை வீரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.