பதிவு:2025-01-12 11:00:52
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலருமான அன்சுல் மிஸ்ரா கலந்து கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை பொழிவு விவரங்கள் குறித்தும், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக பயிரிடப்பட்ட சாகுபடிகள் நிலவரங்கள் குறித்தும், மேலும் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்தும், தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -II செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும் , கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டம், பி.எம்.ஜென்மன் வீடு கட்டும் திட்டம், பின்னர் நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் போன்ற பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் வட்டாரம் புதுப்பாக்கம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது வெங்கட்ராமன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.