பதிவு:2025-01-12 11:02:40
திருவள்ளூரில் உள்ள ஏபிஎஸ் குளோபல் ஸ்மார்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பெற்றோர்களுக்கான மகிழ்வுறு போட்டிகள் :
திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளூரில் உள்ள ஏபிஎஸ் குளோபல் ஸ்மார்ட் பள்ளியில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் பெற்றோர்களுக்கான மகிழ்வுறுப் போட்டிகள் நடைபெற்றது.விழாவை ஏ.பி.எஸ் கல்விக் குழுமத் தலைவர் ரமேஷ் சுப்பிரமணியம், தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பொங்கல் வைப்பதை தொடங்கி வைத்தார்.
விழாவில் பெற்றோர்கள் வண்ணப்பனைகளில் புத்தரிசி பொங்கலிட்டு கரும்பு வைத்து கும்மியடித்து பொங்கலை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கு வண்ண கோலமிடுதல், ஓவியப்போட்டி, சமயற்கலை போட்டி,மங்கள ஆரத்தி தட்டு,அலங்காரப்போட்டி,குழு நடனம், நாட்டுப்புற நடனம்,குழு இசைப்பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் கல்விக்குழும பொருளாளர் பிரேமா சுப்பிரமணியம், செயலர் சக்தி பாலசுந்தரம்,பாடத்திட்ட இயக்குநர்.சுந்தரமூர்த்தி, ஏ.பி.எஸ். குரூப் முதல்வர்கள் கா.பி.பிரீத்தாமேனன், ஆர்.இரத்னாபாய், சக்திபாலசுந்தரம், க.குணசேகரன் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.