ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாசரம் பள்ளியில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் :

பதிவு:2025-01-12 18:42:06



ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாசரம் பள்ளியில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் :

ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாசரம் பள்ளியில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் :

திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாசரம் பள்ளியில் சென்னை ஆலப்பாக்கம் போரூர் லையன்ஸ் க்ளப்,கிரீன் ட்ரீம்ஸ் பவுண்டேஷன் இணைந்து நடத்திய தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வேலம்மாள் மெமோரியல் எஜிகேசனஸ் சேர்மன் மற்றும் சேரிட்டபிள் டிரஸ்ட் எஸ்.சுடலை முத்து பாண்டியன், ட்ரீம்ஸ் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஏ.மேத்யூ ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.பெர்னதெத் மேரி,ஏ.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஆலப்பாக்கம் போரூர் லையன்ஸ் க்ளப், டி.சி.பி மற்றும் சென்னை ஆலப்பாக்கம் பொது நல சேவா சங்கம் தலைவரும் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் பொது செயலாளருமான ஆலப்பாக்கம் லயன் ஏ.ஆர்.டில்லிபாபு கலந்து கொண்டு வண்ணப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு கரும்பு வைத்து பொங்கலை வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து வண்ண கோலமிடுதல், ஓவியப்போட்டி, குழு நடனம், நாட்டுப்புற நடனம்,குழு இசைப்பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஆலப்பாக்கம் லயன் ஏ.ஆர்.டில்லிபாபு வழங்கினார்.

இதில் எம்.ரவிச்சந்திரன்,மாவட்ட தலைவர் எஸ்.செல்வம், தலைவர் ஜி.செல்வம்,செயலாளர் ஏ.கே.பி குமார்,பொருளாளர் ஏ.ஜி.பி பாபு, உறுப்பினர் ஏ.ஜி.கிருஷ்ண குமார், ஜி.பிருந்தாவனம், கிரீன் ட்ரீம்ஸ் பவுண்டேஷன் செயலாளர் எம். பாபு,இ.வேணு,ஜி.முனுசாமி,ஆர். ஜெயக்குமார், ஜி.சேகர், எம்.ரவிகுமார், லயன் எஸ்.பூபதி உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.