காக்களூரில் 3 இளைஞர்களை தாக்கியதாக முக்கிய குற்றவாளியை கைது செய்த போலீசார் காலை உடைத்ததாக அவரது பெற்றோர் குற்றச்சாட்டு : வாகனத்தில் துரத்திய போது தவறி விழுந்து காலில் காயம் என போலீஸ் தகவல் :

பதிவு:2025-01-20 11:24:19

திருவள்ளூர் ஜன 20 : திருவள்ளூர் அடுத்த முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30). இவர் தனது நண்பர்களான சரத் (28), அருண் (20) ஆகிய மூன்று பேரும் கடந்த 18-ஆம் தேதி இரவு காக்களூர் எடை மேடை அருகே மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் சரத் என்பவரை செல்போனில் அழைத்துள்ளார்.காக்களூர் எஸ்டேட் பகுதியில் இருந்து அம்பேக்கரை பார்ப்பதற்காக சரவணன், சரத், அருண் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர். அங்கு சென்றபோது காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் (29), சூர்யா (25), சந்தோஷ் (22), தினேஷ் (20) ஆகியோர் இவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கையால் சரமாரியாக தாக்கியும் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சரவணன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காக்களூர் பகுதியில் பதுங்கி இருந்த அம்பேத்கர் என்பவரை தாலுகா போலீசார் நேற்று 19-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விரட்டி சென்று கைது செய்துள்ளனர்.தொடர்ந்து இரவு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியில் கைது செய்த அம்பேத்கரை கொண்டு வந்தனர். அப்போது, தன்னை தாலுகா போலீசார் கைது செய்து பலமாக தாக்கியதாக தெரிவித்தார். அம்பேத்கரின் பெற்றோரும் தனது மகனை போலீசார் தாக்கியதாக கூச்சலிட்டு கதறினர்.

ஆனால் போலீசாரிடம் விசாரித்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை துரத்தியபோது வளைவில் திரும்பும்போது தவறி விழுந்து காலில் காயும் ஏற்பட்டதாகவும் காவல்துறை சார்பில் எந்த தாக்குதலும் நடத்தவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.