பதிவு:2025-01-20 11:27:04
விவாகரத்து வழக்கிற்காக உறவுக்கார பெண்ணுடன் கணவர் நீதிமன்றத்திற்கு வந்ததால் ஆத்திரம் : ஆட்டோவில் வைத்து கும்மாங்குத்து குத்தி கணவரையும் அடிக்கப் பாய்ந்த பாதிக்கப்பட்ட மனைவியால் பரபரப்பு :
திருவள்ளூர் ஜன 20 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு ஆந்திர மாநிலம் காளாஸ்திரி பகுதியைச் சேர்ந்த உறவுக்கார நபரான முனீந்திரா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு குழந்தைகள் உள்ள நிலையில் முனீந்திரா தொழில் செய்வதற்கு மனைவி சத்யா அவரது பெயரில் வங்கியில் 10 லட்ச ரூபாய் லோன் பெற்றும் தன்னிடம் இருந்த 40 சவரன் நகைகளை அடமானம் வைத்து கணவர் முனீந்திராவிற்கு ஆந்திர மாநிலத்தில் கோழி பண்ணை வைத்து கொடுத்துள்ளார்.
தொழில் நன்றாக செல்ல கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக மனைவி சத்யாவிற்கு தெரிய வரவே இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முனீந்திரா, ஆந்திர மாநிலம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து மனைவி சத்யாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இந் நிலையில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சத்யா விவாகரத்து வழக்கு தொடுத்து ஜீவனாம்சம் கேட்டும் வழக்கு தொடுத்தார்.
கடந்த ஓராண்டாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பாதிக்கப்பட்ட சத்யா அவரது முன்னாள் கணவர் முனீந்திரா நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வாய்தாவை முடித்துவிட்டு செல்லும்போது சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் சென்ற முனீந்தரா மற்றும் உறவுக்கார பெண்ணை வழி மடக்கி தாக்கியுள்ளார்.
தன் வாழ்க்கை வீணானது உன்னால் தான். வங்கியில் லோன் பெற்றும் தனது நகைகளை அடமானம் வைத்தும் தொழில் செய்வதற்கு ஏற்படுத்திக் கொடுத்தால் தன்னையும் தனது குழந்தையையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறாயா? என் கேட்டு பணத்தை வங்கிக்கு செலுத்தாமல் தன்னையே செலுத்த வைக்கிறாயா என கேட்டு ஆட்டோவில் இருந்த உறவுக்கார பெண்ணை பாதிக்கப்பட்ட சத்யா கும்மாங்குத்து குத்தியதால் திருப்பதி சென்னை நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோவில் இருந்த பெண்ணோ பயந்து போய் ஆட்டோவின் மறுபக்கத்தில் கம்பி ஏறி குதிக்க முயன்று கீழே விழுந்த நிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் நின்று ஒரு நிமிடம் வேடிக்கை பார்த்ததால் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சத்யாவுடன் வந்த வழக்கறிஞர்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மனைவியிடம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கோழிப்பண்ணை மற்றும் 40 சவரன் நகைகளை ஏமாற்றி மனைவியின் குழந்தையும் நடுத்தெருவில் விட்ட ஆதங்கத்தில் ஆட்டோவில் வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளனர்
முனீந்திராவுக்கு தமிழ் தெரியாததால் உறவுக்கார பெண் தமிழ் பேசக் கூடியவர் என்பதால் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாக கூறி சத்யா தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இரு தரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.