திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பாக மத்திய பாஜக அரசின் கடந்த 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பதிவு:2022-06-07 12:26:33

திருவள்ளூர் ஜூன் 07 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாஜக அரசின் கடந்த 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட பட்டியல் அணி துணை தலைவர் கராத்தே இ.லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார்.நகர தலைவர் ஜெ.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.நகர துணை தலைவர் உமா மகேஷ்வரி அனைவரையும் வரவேற்றார்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் இராஜ்குமார், மாவட்ட தலைவர் அஸ்வின் ராஜசிம்மா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அப்பொழுது பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாஜக அரசின் கடந்த 8 ஆண்டுகளில் பட்டியல் சமுதாய மக்களுக்கு செய்துள்ள கல்வி, பொருளாதாரம்,வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பா.பொன்முடி சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன்,மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம்,முன்னாள் மாவட்ட செயலாளர் பாலாஜி,எம்.கார்த்திக் உட்பட மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியில் 13 வது வார்டு தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.