நயப்பாக்கம் கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி : குரங்குகளைப் பிடித்து அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

பதிவு:2025-01-21 12:01:19



நயப்பாக்கம் கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி : குரங்குகளைப் பிடித்து அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

நயப்பாக்கம் கிராமத்தில் குரங்குகளின்  தொல்லையால் பொதுமக்கள் அவதி : குரங்குகளைப் பிடித்து அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் நயப்பாக்கம் கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால் பெண்கள், மாணவ, மாணவிகள் தனியாக போக முடியாத அவலநிலை உள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருவள்ளூர் அடுத்த நயப்பாக்கம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்கிருந்து பூண்டி திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லாத நிலையில் சாலையை கடந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் சாலையை கடக்கும் போது குரங்குகளின் தொல்லையால் பெண்கள், மாணவ, மாணவிகள், அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள் தனியாக போக முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடியிருப்பு பகுதிகளிலும் குரங்குகள் சுற்றி திரிவதால் வீட்டில் சமைப்பதற்கு கூட கதவை சாத்தி கொண்டு தான் செய்ய வேண்டியுள்ளது.

இல்லையெனில் பொருட்களையும் எடுத்து சென்று விடுகின்றன. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை கை மற்றும் தலை பகுதியில் கடித்து தையல் போட்டுள்ளனர். இந்த குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.