பதிவு:2025-01-21 12:09:02
திருவள்ளூர் மண்டல அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் மற்றும் 50 ஆண்டுகள் நிறைவேற்றுவதற்கான பொன்விழா :
திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மண்டல அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் மற்றும் 50 ஆண்டுகள் நிறைவேற்றுவதற்கான பொன்விழா பொது மேலாளர் தலைமையில் காஞ்சி மண்டல பொருளாளர் ஏ.முரளி முன்னிலையில் நடைபெற்றது.துணை மேலாளர் திருவள்ளூர் கிளை மேலாளர் திருவள்ளூர் தகுதி சான்று பிரிவு ஏ.இ, டி.ஐ, சி.ஐ மற்றும் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்து கொண்டு வண்ணப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு கரும்பு வைத்து பொங்கலை வரவேற்றனர்.
இவ்விழாவில் திருவள்ளூர் மண்டல கோட்ட மேலாளர், கிளை மேலாளர் தொழிலாளர்கள் தொமுச நிர்வாகிகள் அனைத்து சங்க பிரதிநிதிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டனர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் பொன் விழாவிற்காக இனிப்பும் வழங்கப்பட்டது.