திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2025-01-21 12:11:50

திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் (பதின்ம) மேனிலைப்பள்ளிகளில் 11,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு உரூ.10,000,இரண்டாம் பரிசு உரூ.7,000,மூன்றாம் பரிசு உரூ.5,000 என வழங்கப்பெறவுள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 22.01.2025 புதன்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளன. பேச்சுப்போட்டிகள் காலை 9 மணியளவில் நடந்த பெறவுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வரே ஒரு போட்டிக்கு ஒருவர் என கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு 3 பேர்வீதம் தெரிவுசெய்து அனுப்பவேண்டும்.

11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் திருவள்ளூரில் உள்ள தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேனிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவுசெய்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.