பதிவு:2025-01-22 11:42:30
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம் : கழக அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் பங்கேற்பு :
திருவள்ளூர் ஜன 22 : திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா தலைமையில் நடைபெற்றது.முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கே.பி.எம்.எழிலரசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான், வேங்கை வயலில் சாதி கொடுமை ... முதல்வர் நேரில் பார்த்தாரா என கேள்வி எழுப்பினார். சரவாதிகார அடிப்படையில் திமுக செயல்படுவதாக கூட்டணி கட்சியனரே குற்றம் சாட்டுகின்றனர். போராட்டம் என்றால் திமுகவுக்கு பயம். எதற்கெடுத்தாலும் வழக்குப் போடுவது தான் திமுக வாடிக்கை. 2026-ல் அதிமுக ஆட்சி அமையும். அப்போது பொய் வழக்கு போடாமல் நீங்கள் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி் வைக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்கும்.
அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் கொடுத்ததோடு பணமும் கொடுத்தோம். ஆனால் திமுகவில் ஒரு ரூபாய் கூட தரவில்லை. உதயநிதி போட்டோஷீட் எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார். ஆனால் உதயநிதியோ நெருப்பிலாமல் அடுப்பு , பருப்பில்லா பானை, செருப்போடு செய்தல் தான் திமுகவின் நிலைப்பாடு. 3 முறை மின்கட்டணம் உயர்வு,பால்விலை உயர்வு, சொத்துவரி, வீட்டுவரி எல்லாவற்றுக்கும் வரியைப் போட்டு நம்மிடமிருந்து பணத்தை பிடுங்கி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் தருகிறது. ஆனால் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டும். 2026 ல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர்களுக்கு பிறந்த நாள் என்றால் வசூல் வேட்டை நடைபெறும்.கலெக்ஷன் கமிஷன் தான் அவர்களது குறிக்கோள் ஆனால் அதிமுகவில் நல திட்ட உதவிகள் சொந்த செலவில் வழங்குவது. இதுதான் திமுக வுக்கு அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம். திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது அதிமுக ஆட்சியில் ஸ்காட்லாந்து போலீஸ்-க்கு இணையாக வைத்திருந்தோம். குற்றம் நடைபெறாமல் பாதுகாப்பது. விருப்பு வெறுப்பு இன்றி குற்றம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம் அப்படியே குற்றம் நடைபெற்றால் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தருகிறோம்.
திமுக ஆட்சியில் தவறு செய்பவர்களுக்கு பயம் போய்விட்டது. நிர்வாகிகள் நம்மை காப்பாற்றி விடுவாரகள் என்ற தைரியத்தில் குற்றத்தை சாதாரணமாக செய்கின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த கேள்விக்கு, மக்களின் எண்ணத்திற்கு மாறாக எந்த திட்டமும் கூடாது என்பது அதிமுகவின் நிலைப்பாடு. மக்களின் கருத்தை கேட்டு செயல்பட வேண்டும் ஏதேச்சதிகாரம் கூடாது. த.வெ.க. தலைவர் நேரில் பார்த்தது நல்ல விஷயம் தான் .திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதைப் பொருள் கலாச்சாரம், பாலியல் பலாத்காரத்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் விலைவாசி உயர்வு, வரி உயர்வு மற்றும் . தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாதது போன்ற காரணங்களாலும், நெசவாளர்கள் தொழிலாளர்கள், மீனவர்கள் செத்து பிழைப்பதாகவும் குற்றம் சாட்டினார். பொது மக்கள் அரசு மீது கொந்தளிப்பில் உள்ள நிலையில் ரோடு ஷோ அவசியமா.. என கேள்வி எழுப்பினார்.