தாமரைப்பாக்கம் அருகே தனியார் செங்கல் சேம்பரில் மர்ம காய்ச்சலால் குழந்தை உட்பட 3 பேர் பலி : 10 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி :

பதிவு:2025-01-22 11:47:21



தாமரைப்பாக்கம் அருகே தனியார் செங்கல் சேம்பரில் மர்ம காய்ச்சலால் குழந்தை உட்பட 3 பேர் பலி : 10 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி :

தாமரைப்பாக்கம் அருகே தனியார் செங்கல் சேம்பரில் மர்ம காய்ச்சலால் குழந்தை உட்பட 3 பேர் பலி : 10 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி :

திருவள்ளூர் ஜன 22 : தாமரைப்பாக்கம் அருகே மேலக்கொண்டையூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் திமுக பிரமுகர் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான அன்னை செங்கல் சேம்பர் உள்ளது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 300 கும் மேற்பட்டோர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்து , சேம்பரில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ஒரு சிலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 மாத குழந்தை இறந்துள்ளது. பின்னர் சேம்பரில் வேலை செய்யும் ராமகிருஷ்ணா தியாகு ( வயது 65) என்பவர் நேற்று முன்தினமும், அலந்தர் சந்தா ( வயது 52) என்பவர் நேற்றும் இறந்தனர்.இதையறிந்த சேம்பரில் வேலை செய்யும் 200-க்கும் மேற்பட்டவர்கள் அச்சத்தில் நேற்று காலை தனது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் தகவல் அறிந்த வெள்ளியூர் மற்றும் புலியூர் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய மருத்துவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செங்கல் சேம்பரில் காய்ச்சல் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகாம் அமைத்து பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.

இருப்பிடம் தொடர்ந்து உயிரிழப்பு சம்பவம் நடந்ததால் அனைவரும் அங்கிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். இது குறித்து ஒடிசா மாநில தொழிலாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இந்த செங்கல் சேம்பரில் எங்களுக்கு போதிய வசதிகள் இல்லை , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இங்கே வேலை செய்தவர்கள் சமையல் செய்து சாப்பிட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆனால் உயிரிழந்ததாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை சாப்பிட்டதால் இது போன்ற உயிரிழப்பு ஏற்பட்டதாக காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சப்பை கட்டு கட்டுகின்றனர்.