பதிவு:2025-01-22 11:49:46
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜன 22 : திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழுவின் முடிவின்படி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, கொரோனா காலத்தில் விடுபட்ட 21 மாத அகல விலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் எனவும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 70 வயது கடந்தவர்களுக்கு பத்து சதவீதமும் 80 வயதை கடந்தவர்களுக்கு 20 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் தேவசுந்தரம், மாவட்ட செயலாளர் கணேசன்,தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மாவட்ட செயலாளர் லூர்துசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.