பதிவு:2022-06-11 12:05:49
திருவள்ளூரில் தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண விழா : தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
திருவள்ளூர் ஜூன் 11 : திருவள்ளூரில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு ஒரு ஆண்டில் 100 ஆண்டுகள் சாதனை செய்ததாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சி வந்தாலே மின்தடை வருமென மக்களே கூறுமளவுக்கு அதிக அளவில் மின்தடை ஏற்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது மின் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது. அதிமுக தான் தற்போது எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் பாஜக அண்ணாமலை திமுக அரசு மீது தினமும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். தற்போது மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்து உரிய தண்டனை பெற்றுத் தரலாம் என்றார் மேலும் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தேமுதிக ஒரு போதும் அனுமதிக்காது எனவும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தீண்டாமை சுவர் கட்டப்பட்டது.
தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் யாராக இருந்தாலும் ஜாதி மதங்களை இழிவுபடுத்தும் வகையில் நடக்கக்கூடாது அவரவர்கள் ஜாதி அவர்களுக்கு முக்கியமானது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்றார்.