உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆர் .கே.பேட்டை வட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2025-01-24 12:15:11



உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆர் .கே.பேட்டை வட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆர் .கே.பேட்டை வட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டம் ஆர் .கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அந்த அந்த வட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முடிவுற்ற திட்டப் பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஆர் .கே.பேட்டை வட்டத்தில் உள்ள அம்மையார்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அதே பள்ளியில் மாணவர்கள் வருகை பதிவு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், நீண்ட நாள் வருகை புரியாத மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்கள் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டும். பின்னர் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் , தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் மாற்றுத்திறனாளி பயனாளிகளிடம் வீடு கட்டுவது குறித்து விபரங்களை கேட்டறிந்து வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் உங்கள் நன்றியினை உங்களுக்கு வீடு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர் அம்மையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம், சித்த மருத்துவ பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, காச நோய் பிரிவு, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, தடுப்பூசி போடும் இடம், கருப்பை வாய் மற்றும் மார்பக பரிசோதனை அறை, தாய் சேய் அறை ஆய்வு மேற்கொண்டு மகப்பேறு அறையினை புனரமைக்க பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாணவர்கள் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி ஆட்சியர் ( பயிற்சி) ஆயுஷ் குப்தா, தனித் துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், பொதுப்பணித்துறை கட்டடம் செயற்பொறியாளர் தேவன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார்., ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி, செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.