பதிவு:2025-01-24 12:18:44
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கடைகளில் இருப்பு விவரம், வரவு செலவு கணக்குகள் பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர் கடையில் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை போதுமான அளவு இருப்பு உள்ளதா என சரி பார்த்தார்.பின்னர் பொருட்கள் வழங்கும் பதிவேட்டினை சரி பார்த்த மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன்,
வெளி மாநில தொழிலாளர்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை என பரவலாக புகார் எழுந்தது.
இதனால் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பதால் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டியது விற்பனையாளர்களின் பொறுப்பு. புகார் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தெரிவித்தார்.