திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 3000 ரூபாய், தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் :

பதிவு:2025-01-24 12:28:46

திருவள்ளூர் ஜன 24 : தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சத்துணவு மையத்தில் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என 3 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது காலியாகவுள்ள பணியிடங்களில் அவசர அவசியம் கருதி 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்ப சமூக நல ஆணையர் அரசாணை வெளியிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ரூபாய் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்யக் கோரியும் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன கோஷம் எழுப்பி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குறைந்தபட்ச ஊதியத்தில் பணிபுரியும் ஒரு திட்டம் சத்துணவு திட்டம் என்றும்,அதில் கிராமங்கள் தோறும் வசிக்கின்ற ஏழை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் , வேலை பார்த்து வருவதாகவும்,அவர்களின் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் விதமாக இந்த 3000 தொகுப்பு ஊதியம் திட்டம் உள்ளதாகவும், அதனை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்யப்பட்டு, சிறப்பு கால முறை ஊதியத்தின் அடிப்படை முறையில் ஆட்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சந்திரசேகரன்,மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன்,மாவட்ட செயலாளர் சுலோச்சனா,மாநில துணை பொது செயலாளர் ராமமூர்த்தி,மாவட்ட பொருளாளர் குணசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.