திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

பதிவு:2025-01-24 12:32:43



திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ஜன 24 : திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் குணசேகரன் தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றி கொடுக்க முன்வராத தமிழக அரசை கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்,கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்துவிட்டால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கி வந்ததை நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும்,கடந்த 2007-க்கு பிறகு பணிக்கு வந்த சி.பி.எஸ் திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்ற இறந்துபோன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையையும், அதற்குண்டான அரசு பங்கீடும் இதுநாள்வரை வழங்காமல் இருப்பதை வழங்க வேண்டும்,புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சி.பி.எஸ் எண் தற்காலிகமாக வழங்கப்பட்டு, ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே சி.பி.எஸ் எண் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,கிராம உதவியாளர்களை கிராம பணி பார்ப்பதற்காக பணி அமர்த்தப்பட்டவர்களை கிராம பணியைத் தவிர பல்வேறு மாற்றுப்பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்று அன்றைய வருவாய் நிர்வாக ஆணையர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மாற்றுபணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் அடித்த கட்ட போராட்டமாக பிப் 5 ம் தேதி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டமும், பிப் 27 ம் தேதி ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டமும் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் சந்திரசேகர் எச்சரித்து கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.