திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 12.06.2022 அன்று முப்பதாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-06-11 12:08:12



திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 12.06.2022 அன்று முப்பதாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 12.06.2022 அன்று முப்பதாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் ஜூன் 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி 12.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முப்பதாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி; முகாம் 1100 தடுப்பூசி மையங்;களில் 4400 பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இருபத்தி ஒன்பது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 1514167 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதினருக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 17,69,361 (93.7 சதவிகிதம்). இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 14,43,934 (76.5 சதவிகிதம்). 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 09.06.2022 வரை முதல் தவணையாக 1,04,865 (96 சதவிகிதம்) இரண்டாம் தவணையாக 83054 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ளவர்களில் 09.06.2022 வரை முதல் தவணையாக 56,906 (82.2 சதவிகிதம்) இரண்டாம் தவணையாக 25,605 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 26,997.மீதமுள்ள முதல் தவணை 119039 நபர்களுக்கும் இரண்டாம் தவணை 413813 நபர்களுக்கும்,முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை 215770 நபர்களுக்கும் 12.06.2022 அன்று நடைப்பெறும் சிறப்பு முகாமிலும் இனிவரும் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் கோ-வேக்ஸின் 68950, கோவிசீல்ட் 258190 மற்றும் கோர்பிவேக்ஸ் 42780 தடுப்பூசி கையிருப்புள்ளது.

இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் இம்மாவட்டத்தில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்,இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதிவாய்ந்த நபர்கள்,அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.