இந்திய இராணுவத்தில் அக்னிவீர்திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2025-01-24 12:39:01



இந்திய இராணுவத்தில் அக்னிவீர்திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

இந்திய இராணுவத்தில் அக்னிவீர்திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜன 24 : இந்திய இராணுவத்தில் அக்னிவீர்திட்டத்தின் கீழ் Agniveer (Men), Sepoy (Pharma) and Soldier Nursing Assistant / Nursing Assistant Veterinary ஆகிய பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பதற்கான முகாம் காஞ்சிபுரத்தில் (காஞ்சிபுரம் மாவட்டம்) உள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 05.02.2025 முதல் 15.02.2025 வரை நடைபெற உள்ளது.

இதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் அக்னிவீர்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆள்சேர்ப்பு முகாம்களில் விண்ணப்பதாரர்கள் இராணுவத்தில் சேர்வதற்கு உடற்தகுதி தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதே சமயம் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்ப்பதும் ஆள்சேர்ப்பு செயல்முறைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். விண்ணப்பதாரர்கள் ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பினில் உள்ள ஆவணங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை சரிவர கடைப்பிடிக்காத காரணத்தினால், முகாம்களில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் உள்ள Agniveer Recruitment Rally (Men), Sepoy (Pharma) and Soldier Nursing Assistant / Nursing Assistant Veterinary ஆகிய பணிகளுக்கான சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை என்னென்னவென்று முறையாக அறிந்து அதற்கு ஏற்றார் போல் வரும் 05.02.2025 முதல் 15.02.2025 வரை காஞ்சிபுரத்தில் (காஞ்சிபுரம் மாவட்டம்) உள்ளபேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு நடைபெறவுள்ள ஆட்சேர்ப்பு முகாமின் போது சமர்ப்பிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.