பதிவு:2025-01-27 18:57:42
திருவள்ளூரில் 76-வது குடியரசு தின விழா :மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் :
திருவள்ளூர் ஜன 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 76-வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.
தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.50,000-ம், உதவிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.48,597 மதிப்பிலான கைபேசிகளும் மாவட்ட தொழில் மையம் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.1,3100 மதிப்பீட்டில் சிறு மற்றும் குறு தொழில் துவங்குவதற்கான கடன் உதவிகளும், வேளாண்மை - உழவர்நலத்துறை சார்பாக வேளாண் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிக்கு ரூ.12,03568 மதிப்பீட்டிலான நெல் அறுவடை இயந்திரம் சொட்டு நீர் பாசன கருவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.20,660 மதிப்பிலான தையல் இயந்திரம் சலவை பெட்டியும் தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.4,62,750 மதிப்பிலான சுற்றுலா வாகனம், பயணியர் வாகனம் மற்றும் திருமண உதவித்தொகையும் என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.24,79,075 அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
முன்னதாக, இக்குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழி போராட்ட தியாகிகள் ஆகியோர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து, இனிப்புகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல் ஆளினர்களுக்கு “மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் காவலர்” பதக்கங்களையும். காவரபேட்டையில் இரயில் விபத்தில் சிறந்த முறையில் மீட்பு பணி செய்த 30 காவல் துறையினருக்கு விருதுகளும் அணி வகுப்பில் பங்கேற்ற 117 காவல் துறையினர்கள் 20 முதல்நிலை அலுவலர்கள் மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த 318 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளியூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி, திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் பள்ளி, திருநின்றாவூர் செயின் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, அன்னை சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைபள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேலும், இவ்விழாவில்; மாவட்ட ஆட்சியர் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் செய்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயகுமார், சார் ஆட்சியர் (பொன்னேரி) வாகே சங்கத் பல்வந்த்,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.