பதிவு:2025-01-27 19:00:17
திருமணம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆகியோர் பங்கேற்பு :
திருவள்ளூர் ஜன 27 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமணம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த கிராம சபையில் நீங்கள் நடைபாதை வகுப்பறை கூடுதல் கட்டடம்,சாலைகளில் வேகதடை அமைத்தல், சமுதாய கூடம் அமைத்தல், போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உள்ளீர்கள் அதனை விரைவில் நிறை வேற்று தரப்படும். மேலும், நமது பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான ரூ.25 இலட்சம் வழங்குவதாக கூறியுள்ளார். விடியல் பயணம் திட்டத்தில் 420 கோடி முறை மகளிர்கள் பயணம் செய்துள்ளார்கள், தாய் வீட்டு சீதனம் போல் மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் தள்ளுபடி போன்ற நல்லத் திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
முன்னதாக ஒவ்வொரு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது குறித்தும் மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறை வேற்றப்படும் திட்டங்கள் குறித்தும், ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி எடுப்பது குறித்தும், கூட்டப்பொருளில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை அமைச்சர் ஏற்றுகொள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுகொண்டார்கள்.இதில் திட்ட இயக்குனர் வை .ஜெயக்குமார் (ஊரக வளர்ச்சி முகமை) , உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விக்னேஷ்வரன், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ் , ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.