அரசு பள்ளிகள், அங்கன்வாடி மற்றும் கிராம மேம்பாட்டிற்கு குவால்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உதவி :

பதிவு:2025-01-27 19:01:56



அரசு பள்ளிகள், அங்கன்வாடி மற்றும் கிராம மேம்பாட்டிற்கு குவால்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உதவி :

அரசு பள்ளிகள், அங்கன்வாடி மற்றும் கிராம மேம்பாட்டிற்கு குவால்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உதவி :

திருவள்ளூர் ஜன 27 : குவால்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், “சிஎஸ்ஆர்” நிதியின் கீழ் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனத்தின் மூலமாக கீழ் செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மாடி மற்றும் இரண்டாம் மாடியில் மாணவிகளுக்கு பாதுகாப்பாக கிரில் பணி செய்து கொடுக்கப்பட்டுள்ளது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் கை கழுவும் பகுதிகள் மற்றும் மாணவிகளின் பயன்பாட்டிற்கு 15 நபர்கள் பயன்படுத்தும் வகையிலான ஒரு புதிய கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

திருமணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்டேஜ் மாணவ மாணவிகள் தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கு உதவிகரமாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது, கற்றல் திறன் மேம்பாட்டிற்காக ஸ்மார்ட் டிவி மற்றும் மடிக்கணினிகள் வழங்கியுள்ளனர்.திருமணம் ஊராட்சியில் நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்தியுள்ளனர். இது கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு உதவியாக இருக்கும்.

திருமணம் அங்கன்வாடிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கியுள்ளனர். சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக அங்கன்வாடிக்கு வந்து செல்ல முடியும். இந்த செயல்பாடுகளின் திறப்பு விழா கீழ்மணம்பேடு அரசினர் பள்ளி வளாகத்திலும், திருமணம் கிராமத்திலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குவால்காம் சென்னை டைரக்டர் ரங்கா.ஆர் கலந்து கொண்டு, CSR Lead முரளி கிருஷ்ணன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இதில் கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜானகி அமுதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி வளர்மதி, துணைத் தலைவி உஷா, கல்வியாளர் முரளி, பூந்தமல்லி வட்டார கல்வி அலுவலர் தணிகாசலம், திருமணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஊராட்சி செயலர் இந்திரா, திருமணம் அங்கன்வாடி பணியாளர் செல்வி, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன் மற்றும் திட்ட மேலாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.