புல்லரம்பாக்கத்தில் கிருஷ்ணன் கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி, விநாயகர் சிலைகள் நேற்று நள்ளிரவு அகற்றம்: கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கியதால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை :

பதிவு:2025-01-27 19:04:07



புல்லரம்பாக்கத்தில் கிருஷ்ணன் கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி, விநாயகர் சிலைகள் நேற்று நள்ளிரவு அகற்றம்: கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கியதால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை :

புல்லரம்பாக்கத்தில் கிருஷ்ணன் கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி, விநாயகர் சிலைகள் நேற்று நள்ளிரவு அகற்றம்: கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கியதால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை :

திருவள்ளூர் ஜன 27 : திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் 1979 ஆம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ண ஸ்ரீ சந்தான விநாயகர் திருக்கோயிலை கட்டினர்.இந்த கிருஷ்ணர் கோயிலில் வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து கிருஷ்ண பெருமானை வணங்கி வேண்டுதல் வைப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அரசு இடத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலை இடித்து அகற்ற வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை மற்றும் போலீசார் கடந்த நவம்பர் மாதம் கோயிலை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிப்பதற்கு வந்தனர்.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்போதைக்கு கோவில் இடிக்கும் பணியினை வருவாய்த் துறையினர் கைவிட்டனர்.

இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கிருஷ்ணர் கோயிலை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து புல்லரம்பாக்கம் பகுதியில் இருந்த கிருஷ்ணர் கோயிலை இடித்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் செய்தனர்.இந்நிலையில் நேற்று இரவு புல்லரம்பாக்கம் கிருஷ்ணர் கோயில் பகுதியில் போலீசார் போலீசார் குவிக்கப்பட்டு கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி மற்றும் விநாயகர் சிலைகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.இதனைத் தொடர்ந்து சிலைகளை அரசு வாகனத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புல்லரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இன்று காலை கோவிலில் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் பதற்றத்தை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கியதால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.