திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமினை நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :

பதிவு:2025-01-28 12:44:59



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமினை நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமினை நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :

திருவள்ளூர் ஜன 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமினை சிறப்பாக நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கி பேசினார்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 ஒவ்வொரு ஆண்டும் உலக தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது அதன் அடிப்படையில் நம் மாவட்டத்தில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு இருவார கால முகாம் நடத்தப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 05 ஒன்றியங்களில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது வீடு வீடாக சென்று சுகாதாரத் துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் மற்றும் தன்னாவலர்கள் கொண்டு தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர் அனைத்து பொது மக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது .என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.

கூட்டத்தில் துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் மருத்துவர் டி.கனிமொழி , திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ். மரு.பிரபாகரன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கல்வித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் விக்னேஷ்வரன் அவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் சுகாதாரத் துறைச் சார்ந்த நல கல்வியாளர்கள் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் மருத்துவ மல்லா மேற்பார்வையாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் இயன்முறை பயிற்சி நுட்புநர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.