பெருமாள் பட்டு, நத்தம்பேடு, 25 வேப்பம்பட்டு , 26 வேப்பம்பட்டு ஊராட்சியை நகராட்சியாக உருவாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை :

பதிவு:2025-01-28 12:49:24

திருவள்ளூர் ஜன 28 : திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சி, 25 வேப்பம்பட்டு ஊராட்சி, 26 வேப்பம்பட்டு ஊராட்சி, மற்றும் நத்தம்பேடு ஊராட்சி ஆகிய 4 ஊராட்சிகளை இணைத்து புதியதாக வேப்பம்பட்டு நகராட்சியாக உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருமாள்பட்டு மற்றும் நத்தம்பேடு, 26 வேப்பம்பட்டு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்கள் ஊராட்சியை நகராட்சியாக மாற்றினால் விவசாயத்தையே நம்பி இருக்கும் எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பாதிப்பு ஏற்படும்.அனைத்து வரியினங்களும் உயர்த்தப்படுவதால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே எங்களது ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்காமல் ஊராட்சியாகவே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து கோரிக்கை மனுவை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.