திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை அருகே சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளால் துர்நாற்றம் : ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் அவதி :

பதிவு:2025-01-30 12:02:34

திருவள்ளூர் ஜன 29 : திருவள்ளூர் - ஆவடி சாலை காக்களூர் தொழிற்பேட்டை அருகே சாலையின் இருபுறமும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர்.இந்த முக்கிய சாலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகம், அரசு நடுநிலைப்பள்ளி, ஆவின் பால் பண்ணை ஆகியவற்றிற்கு நாள்தோறும் மாணவ மாணவிகள், வேளாண்மை துறை ஊழியர்கள், பால்பண்ணை ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

அதேபோல் திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு செல்பவர்கள் மற்றும் சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருவள்ளூர் நோக்கி வரும் இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து போன்ற வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றது.ஆனால் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளால் சாலையில் செல்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்த குப்பை கழிவுகளை கால்நடைகளும் சாப்பிடுவதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே நெடுஞ்சாலை பகுதியில் சாலை ஓரத்தில் இருபுறமும் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.