பதிவு:2025-01-30 12:05:06
மாஸ்டர் இன்டர்நேஷனல் அத்லெடிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த கைவண்டூர் மூத்த வீரர் :தமிழக அரசு வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 29 : திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தை சார்ந்தவர் சாமுவேல். 78 வயதான தடகள விளையாட்டு வீரரான இவர் இந்திய அளவிலான, சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அதன்படி தற்போது தாய்லாந்து நகரின் பாங்காக்கில் நடைபெற்ற மாஸ்டர் இன்டர்நேஷனல் அத்லெடிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
அதாவது நீளம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கமும் மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று இந்திய நாட்டுக்கும் தமிழகத்துக்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் மற்றும் அவரை சார்ந்திருக்கின்ற அவரது கிராமமான கைவண்டூர் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனையடுத்து அவரை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றனர். ஆளும் விடியா திமுக அரசு விடிளையாட்டு துறையில் வயது முதிர்ந்தவர்களுக்கு எந்த ஒரு சலுகையும் அறிவிக்கவில்லை.
வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றார்.மேலும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறேன். விளையாடுகிற அனைத்து விளையாட்டுக்கும் வெளிநாடு சென்று வருகின்ற அனைத்து செலவுகளையும் தானே உழைத்து சம்பாதித்த பணத்தில் சென்று தான் விளையாடி வருவதாக வருத்தத்துடன் தெரிவித்தார் .
எனவே அடுத்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு திருவள்ளூருக்கும் தமிழ் நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பேன் என அவர் பெருமிதம் தெரிவித்தார்.தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் முதிர்ந்த வயது விளையாட்டு வீரர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்க தொகை மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளிநாடு சென்று தாயகம் திரும்பும்போது அதற்கான செலவுகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று வெளிநாடு சென்று பதக்கங்கள் பெற்று வருபவர்களுக்கு விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் கௌரவிக்க வேண்டும் என மூத்த விளையாட்டு வீரர் சாமுவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.