புட்லூர் ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி, சுரங்கப்பாதை அமைக்க ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர் கூட்டமைப்பினர் கையெழுத்து இயக்கம் :

பதிவு:2025-01-30 12:10:22



புட்லூர் ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி, சுரங்கப்பாதை அமைக்க ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர் கூட்டமைப்பினர் கையெழுத்து இயக்கம் :

புட்லூர் ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி, சுரங்கப்பாதை அமைக்க ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர் கூட்டமைப்பினர் கையெழுத்து இயக்கம் :

திருவள்ளூர் ஜன 30 : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூருக்கு முன்னதாக புட்லூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த புட்லூர் ரயில் நிலையம் அருகில் மிகவும் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் காக்களூர் தொழிற்பேட்டை உள்ளது.

இந்த நிலையில் புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு வேலையின் காரணமாக சென்று வருகின்றனர்.ஆனால் இந்த புட்லூர் ரயில் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் உயரமாக உள்ளது. இதன் காரணமாக முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகி படிக்கட்டுகளில் ஏறி சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும் இங்கு பயணிகளின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கு இருந்து தினந்தோறும் செல்லும் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு கண்டு புட்லூர் ரயில் நிலையத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்களும் சிரமமின்றி செல்லும் வகையில் புட்லூர் ரயில் நிலையத்தின் இரு புறங்களிலும் லிஃப்ட் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும் ரயில்வே சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என ரயில் பயணிகள், மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று புட்லூர் ரயில் நிலையம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முதியவர்கள் மற்றும் பெண்கள், கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியுற்று வருவதால் புட்லூர் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் காலதாமதம் செய்யாமல் லிஃப்ட் வசதி, சுரங்கப்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.

அப்போது புட்லூர் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரயில் பயணிகள் அனைவரும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டனர். ரயில் பயணிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுக்களை ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்து புட்லூர் ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி, மற்றும் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க மனு அளிக்க உள்ளதாக ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.