மப்பேட்டில் அமைய உள்ள பல்முனைய சரக்கு பெட்டக பூங்காவுக்கு எளிதாக சரக்கு வாகனங்கள் கொண்டு செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் :

பதிவு:2025-01-30 12:12:37

திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளை உற்பத்தியாகும் சரக்குகளை எளிதாக துறைமுகத்திற்கும் விமான நிலையத்திற்கும் கொண்டு செல்லும் வசதிக்காக மப்பேடு சமத்துவபுரம் பகுதியில் 184 ஏக்கர் பரப்பளவில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதிக்கு சரக்கு வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் அரக்கோணம் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் மண்ணூர் கூட்டு சாலை மப்பேடு வரையிலான 5.4 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.58 கோடி திட்ட மதிப்பீட்டில் இரண்டு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் வீடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

சரக்கு பெட்டகம் அப்பகுதியில் அமைவதின் பத்தாயிரம் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது. அத்தாகிய சரக்கு பல்முனை பெட்டகம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.