திருவள்ளூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

பதிவு:2025-02-01 13:11:36

திருவள்ளூர் பிப் 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் - 2025 முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் - 2025 முன்னிட்டு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு 01.01.2025 முதல் 31.01.2025 வரை கடைபிடிக்கப்பட்டது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி , கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணியில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் சிலை வரை சென்றடைந்தது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து, வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த போக்குவரத்து சின்னங்கள் கற்போருக்கான வழிகாட்டி கையெடு, துண்டு பிரசுரம,; கீ செயின், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.இராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிகுமார்(பூந்தமல்லி). சிவனாந்தம், (செங்குன்றம்), மோட்டார் வாகன ஆய்வளார்கள் குணசேகரன், காவேரி, திரு.கருப்பையா, ராஜசேகரன் திருமதி.ராஜ ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.