பதிவு:2025-02-01 13:14:00
திருவள்ளூரில் மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் பற்றிய ஆய்வு அரங்க நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் பிப் 01 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பயின்று வரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கான பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு துணை செய்கின்ற மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் பற்றிய ஆய்வு அரங்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி பயின்று வரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கான பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு துணை செய்கின்ற மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் பற்றிய ஆய்வின் அவசியம் குறித்தும், மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்தும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் விளக்கினார்.
இதில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜே.ரேவதி , அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு , மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் திலகவதி coguide ஆய்வு நிறுவனத்தில் தலைவர் முரளி மோகன் ரெட்டி மருத்துவத்துறை தலைவர்கள் பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மருத்துவ மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.