திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவீரன் காடுவெட்டி ஜெ.குருவின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி :

பதிவு:2025-02-01 13:26:02

திருவள்ளூர் பிப் 01 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மணவாளநகரில் முன்னாள் வன்னியர் சங்க மாநில தலைவர் மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர், வெங்கடேசன், சமூக முன்னேற்ற சங்க செயலாளர் செல்வம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சங்கர்,மாநில செயற்குழு உறுப்பினர் பக்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்,கேசவன்,தொகுதி செயலாளர் கேசவன், தொகுதி தலைவர் அன்பு,நகர செயலாளர் கண்ணன்,மாவட்ட நிர்வாகிகள் சரவணன்,குமார், கண்ணன், பிரபா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.