பதிவு:2025-02-03 12:50:24
திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலால் 4-ஆம் வகுப்பு மாணவன் பலி :
திருவள்ளூர் பிப் 02 : திருவள்ளூர் அருகே திருவூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பிரேம்குமாரின மகன் பி.மைத்தீஸ்வரன் (9). இவர் அப்பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் சில நாட்களாக மர்ம காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து உள்ளனர்.
ஆனால் எந்த நோயால் குழந்தை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறான் என்பது குறித்து பெற்றோர்களுக்கு எந்த தகவலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகளின் உறவினர்களையும் பார்க்க அனுமதிக்காமல் அலைக்கழித்ததாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் பாதிப்பினால் உயிர் இழந்தாரா..? அல்லது இருதய கோளாறு காரணமாக உயிர் இழந்தாரா அந்த எந்த தகவலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கவில்லை என அவனது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் சுகாதார துறை செயல்படுகிறதா என்று கேள்வி எழுவதாக உறவினர்கள் தங்களது குமுறல்களை தெரிவிக்கின்றனர்.