திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர் உள்பட 2 பேரை மணல் கடத்தல் சிறப்பு படை போலீசார் கைது செய்தனர் :

பதிவு:2025-02-04 13:20:23



திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர் உள்பட 2 பேரை மணல் கடத்தல் சிறப்பு படை போலீசார் கைது செய்தனர் :

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர் உள்பட 2 பேரை மணல் கடத்தல் சிறப்பு படை போலீசார் கைது செய்தனர் :

திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் , செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர், திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையங்களில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் கடத்தல் சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தது. இந்த மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது தொடர்ந்து காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மணிகண்டனுடன் நட்பாக பழகி வந்த வினோத்குமார் என்பவர் அவரிடம் இருந்து விலகிய நிலையில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது, மணிகண்டன் உள்ளிட்ட அவனது கூட்டாளிகள் வினோத்குமாரை தன்னுடன் சேருமாறு அழைத்தும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மணல் கடத்தல் வழக்கில் மணிகண்டனை டிசம்பர் மாதம் கைது செய்ததால், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது வினோத்குமார் எனக் கூறி அவரை தாக்கியதுடன் வீட்டிற்கு வந்து அவரது மனைவியிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக எஸ்பியிடம் புகாரும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணிகண்டனையும் அவனது கூட்டாளிகளையும் மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் மணல் கடத்தல் தற்போது நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்துார் பகுதியில் மணல் கடத்தல் சிறப்பு படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்ற பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 40 ஆற்று மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,(35), மற்றும் சிலம்பரசன்( 25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவுசெய்து மணிகண்டன் மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.