மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தொடர்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி :திருவூரில் சம்பிரதாயத்திற்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை :

பதிவு:2025-02-04 13:28:46



மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தொடர்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி :திருவூரில் சம்பிரதாயத்திற்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை :

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தொடர்ந்து  ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி :திருவூரில்  சம்பிரதாயத்திற்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை :

திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரேம்குமார். இவரது மகன் பி.மைத்தீஸ்வரன் (9). இவர் அப்பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்று வந்தார். சிறுவனுக்கு கடந்த ஜனவரி 22 ம் தேதி அன்று பள்ளிக்கு செல்ல முயன்ற போது அவருக்கு 2 கால்களும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் வீட்டின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்திற்கு நடைபயிற்சி செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு நடை பயிற்சி சென்ற சிறுவன் நடக்க முடியாமல் 2 கால்களும் செயலிழந்து கீழே விழுந்துள்ளார்.பின்னர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சில இளைஞர்கள் வீட்டிற்கு கொடுத்த தகவலின் பேரில் தந்தை பிரேம்குமார் மகனை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அச்சிறுவன் வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொன்டு சென்று பரிசோதித்தனர். அங்கு அவருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பின்னர் வீட்டிற்குச் சென்ற அச்சிறுவனுக்கு மீண்டும் 2 கால்களும் நடக்க முடியாமல் தவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.22-ஆம் தேதி இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரத்த மாதிரி, சிறுநீர் மாதிரி போன்ற சிகிச்சைக்கான பரிசோதனை மருத்துவர்கள் செய்துள்ளனர். அத்தகைய சோதனைகள் அவருக்கு நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சின்ட்ரோம் நோய் தொற்று பரவி உள்ளதை கண்டறிந்துள்ளனர் .

அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நாளுக்கு நாள் அவர் கை கால்கள் நரம்புகள் முழுவதும் செயலிழந்துள்ளது.இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இது தொடர்பாக அவரின் பெற்றோர்கள் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர். அப்போது மைத்தீஸ்வரனுக்கு புதியதாக உருவாகியுள்ள ஜிபிஎஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஜிபிஎஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், அதில் சிலர் உயிரிழப்பு சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஜிபிஎஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து திருவூர் கிராமத்தில் சம்பிரதாயத்திற்கு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பரிசோதனை என்ற பெயரில் சுகாதாரதுறை நாடகம் ஆடினார்.