திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மு. பிரதாப் பொறுப்பேற்றார் :

பதிவு:2025-02-04 13:30:50



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மு. பிரதாப் பொறுப்பேற்றார் :

  திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியராக மு. பிரதாப் பொறுப்பேற்றார் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த த.பிரபுசங்கர் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட அமலாக்கப் பிரிவு துணை செயலாளராக இருந்த மு.பிரதாப் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

31 வயதாகும் இளம் வயது கலெக்டராக திருவள்ளூர் மாவட்டத்தின் 24வது ஆட்சியராக மு.பிரதாப் பொறுப்பேற்றுக் கொண்டார்.முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றார்.

இந்நிலையில், புதிய மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப்புக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பயிற்சி கலெக்டர் ஆயுஷ் குப்தா, உதவி கலெக்டர் வாகே சங்கேத் பலவந்த், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய எந்நேரமும் அணுகலாம் என மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற மு.பிரதாப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.