பதிவு:2025-02-07 11:54:09
ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :
திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்
ஆவடி மாநகராட்சி உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறை உயர் மருத்துவ மகப்பேறு பிரிவு, மகப்பேறு சிகிச்சை தாய் சேய் நலம் கவனத்துடன் சிகிச்சையினை கையாள வேண்டும். மேலும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை குறித்தும், வெளிப்புற நோயாளிகளில் எண்ணிக்கை குறிக்கும் , வெளிப்புற நோயாளிகளில் வருகையை ஆன்லைனில் பதிவேற்ற குறிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 41வது வார்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண் உரம் தயாரிக்கும் கூடத்திணை பார்வையிட்டு. ஒரு நாளைக்கு இந்த கூடத்திற்கு வரும் மக்கும் குப்பை எண்ணிக்கைகள் குறித்தும், கூடத்தின் கொள்ளளவு குறித்து கேட்டறிந்து தூய்மை காவலர்கள் வீடு வீடாக குப்பைகளை வாங்கும் பொழுது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பின்னர் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணி வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சி தெருவீதி அம்மன் கோவில் தெருவில் பயனாளி கீதா கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளிடம் வீடு கட்டுவதற்கான பணம் உங்களுக்கு வந்து அடைந்துள்ளதா என கேட்டறிந்து வீடுகளை விரைந்து கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பயனாளிகளிடம் அறிவுறுத்தியும் , இந்த ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் மொத்த திட்ட பணிகள் குறித்தும் மேலும் இவ்வாண்டு கலைஞரின் கனவு இல்லம் மொத்த பயனாகளின் எண்ணிக்கைகள் குறித்தும், தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.69.90 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து வரும் கல்வியாண்டு முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், மேலும் ஊரக வீடுகள் சிரமைப்பு திட்டத்தின் கீழ் 2024 -25 ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வீட்டு பணிகளும் அதே பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மயான தகனம் மேடை நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச. கந்தசாமி, பொறியாளர் ரவிசந்திரன் , மாநகர சுகாதார நல அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நானேஸ்வரி, வேதநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.