பட்டரைப்பெரும்புதூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி : மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை :

பதிவு:2025-02-07 11:59:22

திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி தடுக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முரளி (35) . இவர் சென்னையில் வேலை செய்து முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அதே போல் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பட்டரைப்பெரும்புதூர் அருகே மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்ததில் முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான திருநாவுக்கரசு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திருநாவுக்கரசை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முரளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.