மேல்மனம்பேடு கிராமத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான ஜாகுவார் ஐ -பேஸ் கார் எரிந்து நாசம் :

பதிவு:2025-02-07 12:01:26



மேல்மனம்பேடு கிராமத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான ஜாகுவார் ஐ -பேஸ் கார் எரிந்து நாசம் :

மேல்மனம்பேடு கிராமத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான ஜாகுவார் ஐ -பேஸ் கார் எரிந்து நாசம் :

திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் தவமணி (38).இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த நபரிடம் ரூ.80 லட்சத்திற்கு ஜாக்குவார் எஃப் பேஸ் பெட்ரோல் காரை வாங்கியுள்ளார்.இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் திருவள்ளூர் பகுதிக்கு சென்று தனது வீட்டிற்கு வந்த அவர் காரை வீட்டின் வெளியே சாலையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்குவதற்காக தனது வீட்டின் முன்பக்க கேட்டை இரவு 12 மணி அளவில் பூட்டிக்கொண்டு அறைக்குச் சென்று படுத்து உறங்கி உள்ளார்.

இந்நிலையில் சரியாக நள்ளிரவு 12.50 மணியளவில் கார் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.கார் முழுவதும் மளமளவென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் வீட்டின் இரண்டாவது தளம் வரை உயரத்தில் தீ பரவியதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் பதறி தவித்தனர்.நள்ளிரவு 12 -50 மணியளவில் தீப்பிடித்து எரிந்த கார் 1-45 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது அதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் முழுவதாக எரிந்து நின்ற காரில் பரவி இருந்த தீயை அணைத்தனர்.

அதன் பிறகு வீட்டில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியே வந்தனர்கார் எரிந்த தீ விபத்தில் தரைத்தளம், முதல், இரண்டாம் தளம் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியும் வீட்டின் முன்பு சிதறிக் கிடந்தன.காரில் வைத்திருந்த 20 ஆயிரம் பணம், 2 விலை உயர்ந்த சாம்சங் செல்போன், வங்கி காசோலை புத்தகம் என அனைத்தும் எரிந்து நாசமானது.அதைத்தொடர்ந்து கார் உரிமையாளர் தவமணி வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கார் எலக்ட்ரிக்கல் தீ விபத்தால் எரிந்து நாசமானதா? அல்லது யாராவது சதி வேலை செய்தார்களா ?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.