பதிவு:2025-02-07 12:04:50
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் சிறு தொழில் மேற்கொள்வதற்கான, வங்கி கடன் மற்றும் சுய தொழிலுக்கான பயிற்சிகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் சுயத்தொழில் மேற்கொள்வதற்கான, வங்கி கடன் மற்றும் சுய தொழிலுக்கான பயிற்சிகள் அளித்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பயன்பெற திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களிலோ அல்லது கைப்பேசியின் வாயிலாகவோ www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணைப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.