திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த இரண்டு நபர்கள் போக்சோ வழக்கில் கைது :

பதிவு:2025-02-08 13:04:33

திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த இரண்டு நபர்கள் போக்சோ வழக்கில் கைது :

திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த  இரண்டு நபர்கள் போக்சோ வழக்கில் கைது :

திருவள்ளூர் பிப் 08 : திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் -24 என்ற இளைஞரை கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.சிறுமியிடம் காதலிப்பது போன்று நடித்து அவரை இளைஞர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது .

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரை காதலிப்பதை அந்த இளைஞர் சில தினங்களுக்கு முன்பு நிறுத்தி உள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறியதால் இளைஞர் மீது மணவாளநகர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அதேபோன்று ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி சிறுமியை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர் பாலாஜி -(34 ) என்பவர் மீது சிறுமியின் பெற்றோர்கள் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அடிப்படையில் அவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.