பதிவு:2025-02-08 13:10:04
திருவள்ளூர் அடுத்த குப்பம்மாசத்திரம் பகுதியில் ஆட்டோவின் மீது கார் மோதியதில் ஒருவர் கவலைக்கிடம் : இரண்டு பேர் பேர் படுகாயம் :
திருவள்ளூர் பிப் 08 : திருவள்ளூர் மாவட்டம் குப்பம்மாசத்திரம் பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது திருவள்ளூரை நோக்கி அதிவேகமாக வந்த மாருதி விட்டாரா கிராண்ட் கார் மோதியதில் ஆட்டோவில் இருந்த பெரியசாமி என்பவர் ஆட்டோவுடன் நசுங்கி உயிருக்கு போராடினார். அதேபோன்று அவ்வழியாக நடந்து சென்ற கோபி மற்றும் மோனிகா மீதும் கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.