திருவள்ளூர் நிகேதன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 : மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2025-02-10 11:36:42

திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் நிகேதன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 1 தேர்வு மையங்களில் ஆண்கள் 115, பெண்கள் 124 மொத்தம் 239 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார்கள். 234 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 5 நபர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையத்தினை கண்காணிக்க துணை ஆட்சியர் அளவில் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இயக்குக்குழு (Mobile team) வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை தொடர் கண்காணிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டு உள்ளனர், தேர்வு நடை பெறுவதற்கான தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, பேருந்து வசதி, கழிப்பறை வசதி போன்ற அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதுபவர்கள் சிறப்பான சூழ்நிலையில் எழுதுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் தெரிவித்துள்ளார்.இதில் திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.